உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மோதி தி.மு.க., பிரதிநிதி பலி

மொபட் மோதி தி.மு.க., பிரதிநிதி பலி

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வமணி, 55. இவர், டவுன் பஞ்சாயத்தின், 10வது வார்டு தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு காந்தி நகர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டி.வி.எஸ்., மொபட் மோதியது. அதில் செல்வமணி விழுந்து படுகாயம் அடைந்தார். பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மதியம் உயிரிழந்தார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி