தி.மு.க., சார்பில் 3 தொகுதிகளில் நாளை ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம்
சேலம், தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலரான, சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கை:மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட, 3 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம், அக்., 30ல்(நாளை) நடக்க உள்ளது. அதன்படி அன்று காலை, 9:00 மணிக்கு, சங்ககிரி தொகுதியில், பவானி பிரதான சாலையில் உள்ள வாசுதேவ் மஹாலிலும், 11:00 மணிக்கு, இடைப்பாடி தொகுதியில், இடைப்பாடி - சங்ககிரி பிரதான சாலை, மலையனுாரில் உள்ள முகில் திருமண மண்டபத்திலும், மதியம், 3:00 மணிக்கு, மேட்டூர் தொகுதி, நவப்பட்டியில் உள்ள திருமலை மாதவி மஹாலிலும் கூட்டம் நடக்க உள்ளது. அதில், என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு குறித்தும் ஆலோசிக்கப்படும். அதனால் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், நிர்வாகிகள், தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் மற்றும் கிளை, வார்டு செயலர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்