கூட்டமாக சுற்றும் நாய்கள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ஆத்துார்: ஆத்துார், நரசிங்கபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பகல் மட்டுமின்றி, இரவிலும் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்-றித்திரிகின்றன. சாலையை மறித்து நிற்பதால், காலையில் பள்ளி செல்லும் மாணவியர் மட்டுமின்றி பெண்கள், முதியோர் அச்சத்-துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிக்க, குரைத்தபடி நாய்கள் விரட்டிச்செல்வதால், தடுமாறி விழுகின்றனர். இரவில் கூட்டமாக திரியும் நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டை-யிட்டு, சாலையில் ஓடுவதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வரு-கின்றனர். குறிப்பாக ஆத்துார், ராணிப்பேட்டை, கடைவீதி வழி-யாக செல்லும் சாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையார்பாளையம், காந்தி நகர், விநாயகபுரம் ஆகிய பகுதி-களில், இரவு, 11:00 மணிக்கு மேல், இருசக்கர வாகன ஓட்டி-களை, நாய்கள் விரட்டிச்செல்வதால், சிலர் தடுமாறி விழுவதும், நாய் கடிக்கு ஆளாவதும் தொடர்கிறது. அதனால் நாய்களை பிடிக்க, நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.