உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீருக்கு 3 மாதங்களாக திண்டாட்டம்

குடிநீருக்கு 3 மாதங்களாக திண்டாட்டம்

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி, அழகனுார் பிரதான சாலையில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில், காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால், 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், 1 கி.மீ.,ல் உள்ள குப்பாண்டிப்பாளையம் சென்று, பெண்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். குறிப்பாக மூதாட்டிகள், பிரதான சாலையை கடந்து செல்லும்போது தடுமாறுவதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, மக்கள் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !