உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி தலைகுப்புற கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

லாரி தலைகுப்புற கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

சேலம்: ஆந்திராவில் இருந்து பட்டிமாவு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று, சேலத்துக்கு வந்துகொண்டிருந்தது. வீராணம் அடுத்த அரமனுார், செட்டியார்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்த-போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருக்கும் நிழற்-கூடத்தின் மீது மோதியது. இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தியி-ருந்த ஸ்பிளண்டர் பைக், தண்ணீர் டேங்க், மாட்டு கொட்டகை ஆகியவை, லாரி மோதி பலத்த சேதமடைந்தன. வீராணம் போலீசார், டிரைவர் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர், வேலுார் டவுன், சலவன்பேட்டை, சதுக்கரா மடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !