மேலும் செய்திகள்
வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவர்கள் மீட்பு
02-May-2025
சேலம், சேலம், அழகாபுரத்தை சேர்ந்த, 18 வயது சிறுமி, வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர், கடந்த, 4ல் அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் சிறுமியை தேடினர். இந்நிலையில் அவரை, அழகாபுரம் சின்ன புதுாரை சேர்ந்த வேன் டிரைவர் ரமேஷ், 40, என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச்சென்றது தெரிந்தது. பின் அப்பகுதியில் போலீசார் விசாரித்தபோது, ரமேஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், ரமேஷை பிடித்து, அவருடன் இருந்த சிறுமியை மீட்டு, சேலம் அழைத்து வந்தனர். பின் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
02-May-2025