பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இரவில் சாரல் மழை பெய்து வந்தது.அதேபோல் நேற்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் மதியம், 3:00 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்-டது. 3:10 முதல், 3:40 மணி வரை, சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, 5:00 மணி முதல், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது.இதில், சற்று தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், எதிரே வரும் மற்ற வாகனங்கள் தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகி, மெதுவாக ஓட்டிச்சென்றனர். 5:15 முதல், 6:30 மணி வரை, பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதன் எதிரொலியாக, குளிரின் தாக்கம் அதிகரித்-திருந்தது.