உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு

ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு

சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதையன், 34. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, நண்பர்களுடன் குமரகிரியில் மது அருந்தினார்.பின் ஏரி நடுவே உள்ள மரத்தை பார்த்த மாதையன், அதில் இருந்த கோணக்காய் பறிக்க ஏரியில் இறங்கி சென்றார். பறித்து விட்டு திரும்பி வரும்போது சேற்றில் சிக்கி மூழ்கிவிட்டார். வெகுநேரம் ஆகியும் வராததால், நண்பர்கள் தகவல்படி, அம்மாபேட்டை போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்தனர். ஒருவழியாக, 20 மணி நேரத்துக்கு பின், நேற்று காலை, 8:30 மணிக்கு மாதையனை, சடலமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை