உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை விற்பனை: மெடிக்கல் உரிமம் நிரந்தர ரத்து

போதை விற்பனை: மெடிக்கல் உரிமம் நிரந்தர ரத்து

சேலம், சேலம், சேலத்தாம்பட்டி, சித்தனுார் பிரதான சாலையில் கோகுல் மெடிக்கல் உள்ளது. அங்கு, மருந்து ஆய்வாளர், போலீசார் அடங்கிய குழுவினர், சோதனையில் ஈடுபட்டபோது, வலி நிவாரணி மாத்திரையை முறைகேடாக கொள்முதல் செய்து, அதை, 'போதை' வாலிபர்களுக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீராணம் தனிப்படை போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த பிப்., 15ல், மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கோகுல்ராஜ், 28, என்பவரை கைது செய்தனர்.மேல் நடவடிக்கை எடுக்க, சென்னை மருந்து கட்டுப்பாடு இயக்ககத்துக்கு சேலம் உதவி இயக்குனர் மாரிமுத்து பரிந்துரைத்தார். அதையேற்று மெடிக்கல் ஷாப் உரிமத்தை நிரந்தர ரத்து செய்து, இயக்குனர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை