உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, அதற்கு மேலான கல்வி தகுதி பெற்றோர், வேலைவாய்ப்பு அலுவல-கத்தில் பதிந்து, அதை தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டு நிறைவ-டைந்த பின் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து ஓராண்டு நிறைவுபெற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் அரசு சார்பில் உதவித்-தொகை வழங்கப்படுகிறது.குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மனுதாரர், 45 வயதுக்குள், பிற இனத்தவர், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தோல்வி அடைந்தோருக்கு மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றோ-ருக்கு, 300, மேல்கல்வி தேர்ச்சிக்கு, 400, பட்டப்படிப்பு தேர்ச்-சிக்கு, 600 ரூபாய் வீதம், காலாண்டுக்கு ஒருமுறை பயனாளி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளி, 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சிக்கு, 600 ரூபாய், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு, 750, பட்டப்படிப்பு தேர்ச்-சிக்கு, 1,000 ரூபாய் வீதம், அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கப்-படும். மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காட்டி, உதவித்தொகை விண்ணப்-பத்தை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தவிர, www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவி-றக்கம் செய்யலாம். ஜூலை, 2024 முதல் செப்டம்பர் முடிய காலாண்டுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் செப்டம்ப-ருக்குள் நேரில் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ