உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் அட்மிட்:வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் அட்மிட்:வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை

சேலம்:சேலம், கொண்டலாம்பட்டி அருகே பூலாவரியை சேர்ந்த, மெக்கானிக் பழனிவேலு, 60. இவருக்கும், உறவினரின் மகன் சிவாவுக்கும், கடந்த அக்., 25ல் சொத்து பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா, கட்டையால் பழனிவேலுவை தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த, 27ல் வீடு திரும்பினார். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.இதையடுத்து பழனிவேலுவின் மகன் யுவராஜ் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்தான், கட்டையால் தாக்கியதில் இறந்தாரா, உடல்நலக்குறைவால் இறந்தாரா என்பது தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர். அதன்படி வழக்கின் தன்மை மாறும் என்றும், போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ