ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
சேலம், சென்னையிலிருந்து, நேற்று காலை சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. பொன்னம்மாபேட்டை அருகே வந்த போது, 70 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்தார். இதில் அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.அதில் தற்கொலை செய்து கொண்ட முதியவர், பொன்னம்மாபேட்டை குஞ்சான்காடு பகுதியை சேர்ந்த ரெங்கநாயகலு, 70, என்பது தெரியவந்தது. இவருக்கு சரோஜா என்ற மனைவி, வெளியூரில் வேலைபார்த்து வரும் இரு மகன்கள் உள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.