ஆட்டோ மோதி முதியவர் பலி
சேலம், கள்ளக்குறிச்சி, தேங்காய் நத்தத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 80. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் திருப்பத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, ரயில் மூலம் சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்றிரவு வந்தனர். தொடர்ந்து பஸ்சில் செல்ல வெளியே நடந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஆட்டோ, பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.