பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு
பனமரத்துப்பட்டி, இடங்கணசாலை நகராட்சி மேட்டுக்காட்டை சேர்ந்தவர் பெருமாள், 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, 'ஸ்கூட்டி' மொபட்டில், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, சந்தியூர் அருகே ஆறாங்கல் திட்டு பகுதியில், நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், முன்புறம் சென்ற லாரியை முந்த முயன்றது. இதனால் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து பெருமாள், சாலையில் விழுந்தார். அவர் மீது, பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.