உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

மொபட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

ஆத்துார், ஆத்துார் அருகே மல்லியக்கரை களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி, 77. இவர், 'டிவிஎஸ் - 50' மொபட்டில், நேற்று முன்தினம், கருத்தராஜாபாளையம் நோக்கிச் சென்றுவிட்டு, ஆத்துார் - ராசிபுரம் சாலையில் சென்றார். அப்போது, மல்லியக்கரையை சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி மகன் பிரவீன்குமார், 21, 'கே.டி.எம்.,' பைக்கில் வந்தபோது, மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைசாமி, பிரவீன்குமார் ஆகியோர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைசாமி உயிரிழந்தார். இதுகுறித்து, மல்லியக்கரை போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !