விபத்தில் முதியவர் பலி கார் டிரைவருக்கு காப்பு
ஆத்துார், ஆத்துார், சீலியம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 76. நேற்று, காலை, 9:45 மணிக்கு, சீலியம்பட்டி பிரிவு சாலையில், 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆத்துாரில் இருந்து, நாமக்கல் நோக்கிச்சென்ற, 'சுசுகி' கார், மொபட் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த நாச்சிமுத்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு, சேலம் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரித்து, காரை ஓட்டி வந்த, நாமக்கல், சேந்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் அருண், 53, மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.