மேலும் செய்திகள்
பள்ளப்பட்டியில் முப்பெரும் விழா
02-Jan-2025
விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்புசேலம் : நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகர், 62. 'மல்டிலெவல் மார்க்கெட்டிங்' தொழில் செய்தார். சில நாட்களுக்கு முன், சேலம் வந்த அவர், பள்ளப்பட்டி பி.எம்.ஆர்., நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். 4 நாட்களாக, அவரது அறை திறக்கப்படாத நிலையில், நேற்று துர்நாற்றம் வீசியது. விடுதி நிர்வாகம் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் மனோகர் இறந்து கிடந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றி, அவரது உறவினர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
02-Jan-2025