அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
சேலம்: சேலம் சுக்கம்பட்டி புத்து காலனியை சேர்ந்தவர் சம்பூர்ணம், 70, வீட்டு வேலை செய்து வந்தார். தினமும் சுக்கம்பட்டியில் இருந்து தாதகாப்பட்டிக்கு வேலைக்கு வந்து செல்வார். வழக்கம் போல நேற்று முன்தினம் சுக்கம்பட்டியில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அரசு டவுன் பஸ்சில் காலை, 6:00 மணிக்கு வந்தார். பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வர சம்பூர்ணம் முற்பட்டுள்ளார். அப்போது அரசு பஸ் இவர் மீது மோதியதில், தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம், சம்பூர்ணம் கால் மீது ஏறியது. அருகில் இருந்தவர்கள் சம்பூர்ணத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.