உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி

கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி

ஆத்துார், ஆத்துார், மல்லியக்கரை, இந்திரா நகரை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சின்னப்பிள்ளை, 85. இவர் சில நாட்களாக, வேப்பங்கொட்டை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த, விஜய் என்பவரது விவசாயக்கிணற்றில், நேற்று சின்னப்பிள்ளை இறந்து கிடந்தார். மல்லியக்கரை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி