உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தல் துணை தாசில்தார் மர்மச்சாவு; கணவர், வேலைக்காரியிடம் விசாரணை

தேர்தல் துணை தாசில்தார் மர்மச்சாவு; கணவர், வேலைக்காரியிடம் விசாரணை

மேட்டூர் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டசபரி, 38. மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி நர்மதா, 38, தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்தனர். இவர்களது மகன் மவுலி ஆதித்யா, 4.தம்பதியர், மேட்டூர் மைக்கேல் தோட்டத்தில் வசித்தனர். கடந்த மார்ச், 28ல் நர்மதா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடந்த, 14ல் சேலம் டி.ஆர்.ஓ., மேனகா விசாரித்தார்.அப்போது, மேட்டூர் தாசில்தார் விஜி, நர்மதாவிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், வெண்ணிலா, மணிகண்டசபரி கூறியிருந்தனர். இதுதொடர்பாக மேட்டூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி, நேற்று மணிகண்டசபரி, அவரது வீட்டில் வேலை செய்த பெண் பொன்னியிடம் தனித்தனியே விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை