மேலும் செய்திகள்
மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா
25-Nov-2024
திறன் வளர்ப்பு பயிற்சியுடன் வேலைஆத்துாரில் வரும் 4ல் முகாம்சேலம், டிச. 1-சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில், 'தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தில், ஊரக பகுதியில் உள்ள, 8ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த, 18 முதல், 45 வயது வரையுள்ள இளைஞர்கள், மகளிருக்கு, 3 முதல், 6 மாதம் வரை இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன், வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.இதற்கான தேர்வு முகாம், ஆத்தார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வரும், 4 காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு, இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழக அரசின் மூலம் வழங்கப்படும்.வேளாண்மைக்கு, 'ட்ரோன்' கருவி இயக்கும் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட், நர்சிங், கணினி, கைவினை பொருட்கள் தயாரிப்பு, சில்லரை வர்த்தகம், சமையல் கலை, ஆயத்த ஆடை தயாரிப்பு, சி.என்.சி., ஆப்ரேட்டர், வங்கி சார்ந்த பயிற்சி ஆகியவை பெற விரும்புவோர், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுடன், நேர்காணலில் பங்கேற்கலாம். விபரம் பெற, 74027 06910 என்ற எண்ணில் அழைக்கலாம்.
25-Nov-2024