ஓமலுார் பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
ஓமலுார்ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தலைவி(தி.மு.க.,) செல்வராணி தலைமை வகித்தார்.அதில் ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை வளாகத்துக்கு, டாக்டர் கலைஞர் கருணாநிதி என பெயர் வைப்பது; பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வடிகால் வசதி ஏற்படுத்துவது; தினசரி சந்தை அருகே, 40 காலி நில கடைகள் கட்டுவது; வாரச்சந்தை வளாகம் அருகே டவுன் பஞ்சாயத்து சமுதாயக்கூடம், திருமணம், வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பயன்படும்படி டைனிங் டேபிள், சேர் ஆகியவற்றை கொள்முதல் செய்வது உள்பட, 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத்தலைவி புஷ்பா(தி.மு.க.,) உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.