மேலும் செய்திகள்
குப்பைக்கு வைத்த தீயில் வாகனங்கள் எரிந்தன
02-Aug-2025
மேட்டூர், மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்த கேபிள் ஆப்பரேட்டர் ஸ்ரீகாந்த், 48. இவரது டாடா இண்டிகோ காரை, அவரது சகோதரர் ஸ்ரீதர், நேற்று மதியம், 2:45 மணிக்கு, மேட்டூர் நோக்கி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அவருடன் இரு நண்பர்கள் இருந்தனர். 'ஏசி' போட்டபடி சென்றனர். மாதையன்குட்டை அரசு பள்ளியை கடந்த நிலையில், இன்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே காரை விட்டு, 3 பேரும் இறங்கி, முன்பக்கம் சென்று இன்ஜினை திறந்து பார்த்தனர். அப்போது இன்ஜின் ஒயர் கருகி, கார் எரியத்தொடங்கியது. மளமளவென தீ பரவி, அரை மணி நேரத்தில் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. பின் மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், காரில் கருகிய பகுதிகளை முற்றிலும் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Aug-2025