உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் இணைப்புக்கு லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

சேலம், டிச. 18-சேலம், நெத்திமேடு, காமராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் புதிதாக கட்டிய நெல் அரைக்கும் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க விண்ணப்பித்தார். அதை பரிசீலித்த இளநிலை உதவியாளர் பாண்டியன், 75, உடனே மின் இணைப்பு வழங்க, 17,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதனால் வெங்கடாசலம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, 2007 பிப்., 20ல், மின் அலுவலகத்தில் இருந்த பாண்டியனிடம், ரசாயனம் தடவப்பட்ட, 10,000 ரூபாயை, லஞ்சமாக வெங்கடாசலம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த போலீசார், பாண்டியனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பாண்டியனுக்கு, 2 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தங்கராஜ் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை