இ.பி.எஸ்., பிறந்தநாள் நிகழ்ச்சி நாளை ஆலோசனை கூட்டம்
ஆத்துார்:அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., 71வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 12ல், சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ரத்த தானம், மருத்துவ முகாம், கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். இதுதொடர்பான மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், மே 3(நாளை) காலை, 10:00 மணிக்கு, ஓமலுார் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் பங்கேற்க வேண்டும்.