உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு

பள்ளிகளில் நன்னெறி கல்வி; அடிக்கடி ஆய்வுக்கு உத்தரவு

சேலம்: தமிழக அரசு பள்ளிகளில் திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள, 105 அதிகாரங்களை உள்ளடக்கி, 6 முதல், பிளஸ் 2 வரை, நன்னெறிக்கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது.அதில் நன்னெறி வகுப்புகளை பள்ளிகளில் நடத்தல்; காலை வணக்க கூட்டத்தில் தினம் ஒரு குறளை மாணவர்கள் பொருளுடன் கூறுதல்; குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி - வினா போட்டிகள் நடத்தல்; 100 குறள்களுக்கு மேல் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இவற்றை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்றுகிறதா என்பதை, கல்வித்துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல் வழங்க, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை