தொகுதி மறுசீரமைப்பை அனைவரும் எதிர்க்க வேண்டும்: சீமான்
சேலம்: பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண வரவேற்பு விழா, சேலத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் பங்கேற்ற, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:தொகுதி சீரமைப்பு குறித்து, 2023ல் எதிர்த்து அறிக்கை வெளியிட்டேன். மக்கள் தொகை அடிப்டையில் பிரிக்கும்போது, வட மாநிலங்களுக்கு அதிகமாகவும், நமக்கு குறைந்தும் விடும். சீர்திருத்தம் பெயரில், சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும்? தேவையிலலாத போராட்டங்களை நமக்குள்ளே திணிக்கின்றனர். இதை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்; போராடி தடுப்போம். மாநில உரிமை என்று வரும்போது, எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும். எல்லா ஆற்றலையும் சேர்த்து, ஒருமித்த குரலாக எதிர்ப்பை தெரிவித்து, இது அவசியமில்லை என்று நாம் தடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.