உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹெச்.எம்., வீட்டில் திருட முயற்சி ராணுவ முன்னாள் வீரர் சிக்கினார்

ஹெச்.எம்., வீட்டில் திருட முயற்சி ராணுவ முன்னாள் வீரர் சிக்கினார்

தாரமங்கலம் தாரமங்கலம், போத்தனுார் சாலை, பங்களா தோட்டத்தை சேர்ந்தவர் வித்யா, 54. புளியமரத்துக்காடு அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக உள்ளார். இவரது கணவர், மேச்சேரியில் ஆட்டோ மொபைல் கடை நடத்துகிறார். நேற்று மதியம், 1:30 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். 3:15க்கு திரும்பி வந்தபோது, ஒருவர், கையில் உறை அணிந்து, இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டிருந்ததை பார்த்தார். உடனே திருடன் என கூச்சலிட்டார். அந்த நபர் தப்பி ஓடினார். ஆனால் மக்கள், வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து, தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். பின் வித்யா புகார்படி போலீசார் விசாரித்தனர்.அதில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த கணேசன், 41, என்பதும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிந்தது. மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி