மேலும் செய்திகள்
22 நாள் முழு கொள்ளளவில் மேட்டூர் அணை நீர்மட்டம்
06-Jan-2025
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. மொத்தம், 152 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அணை நீர்பரப்பு பகுதியில், 93.47 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையில் இருந்து சில நாட்களாக வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன், 12ல் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜன., 28ல், மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நிறுத்தப்படும். அதன்படி இன்னும், 9 நாட்களுக்கு பின், அணையில் பாசன நீர் நிறுத்தப்படும்.அணை நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது, ஜனவரி முதல் ஜூன் வரை, கரையோரம் வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள், 200 ஏக்கருக்கு மேல் பருத்தி, எள், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வர். நேற்று அணை நீர்மட்டம், 112.94 அடி, நீர்இருப்பு, 82.65 டி.எம்.சி.,யாக இருந்தது. இன்னும், 9 நாட்கள் பாசனத்துக்கு அதிகபட்சம், 4.5 டி.எம்.சி., நீர் திறக்கப்படும். இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு, 77 முதல், 78 டி.எம்.சி., இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் நடப்பாண்டு வறண்ட நீர்பரப்பு பகுதி வெகுவாக குறைந்துவிடும். அதற்கேற்ப அணை நீர்பரப்பு பகுதியில் பயிர் சாகுபடி வெகுவாக குறையும் என்பதால், அணை கரையோர விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
06-Jan-2025