மரபு விதைகளை மீட்டெடுக்கும் கண்காட்சி
சேலம்: சேலத்தில் தமிழர் மரபு மீட்பு குழு சார்பில், மரபு விதைகளை மீட்டெடுக்கும் கண்காட்சி நேற்று நடந்தது. அதில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பூங்கார் உள்பட, 30க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மரபு சார்ந்த, 40 வகை தக்காளி ரகங்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள், காய்கறி, பழங்கள், பாரம்பரிய மரபு விதைகள், பழங்கால கிழங்கு வகைகள், பூச்செடிகள், தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுகளுக்கான அரங்குகள் இடம்பெற்றிருந்தன. 3 திருக்குறளை பிழையின்றி சொல்வோருக்கு, உலக்கையால் இடித்து தயாரிக்கப்பட்ட சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர், கண்காட்சியை பார்வையிட்டனர்.