மேலும் செய்திகள்
சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு
24-Jan-2025
சேலம்: கோவை - கயா எக்ஸ்பிரஸ், தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்-ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே இயக்கப்பட்ட கோவை - கயா எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பால், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்பாத் - கோவை வார சிறப்பு ரயில், சனிதோறும் மாலை, 4:10க்கு கிளம்பி, கயா, மிர்ஷாபூர், வாரங்கல், விஜய-வாடா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே, திங்கள் மாலை, 6:30க்கு கோவையை வந்து சேரும். சேலத்துக்கு திங்கள் மதியம், 3:12, ஈரோட்டுக்கு, 4:15க்கு வந்து செல்லும். கோவை - தன்பாத் வார சிறப்பு ரயில், செவ்வாய் காலை, 7:50க்கு புறப்பட்டு, வியாழன் மதியம், 1:00 மணிக்கு தன்பாத்தை அடையும்.
24-Jan-2025