உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயுதபூஜையில் கூடுதல் குப்பை: அகற்றும் பணி விறுவிறு

ஆயுதபூஜையில் கூடுதல் குப்பை: அகற்றும் பணி விறுவிறு

சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை, சரஸ்-வதி பூஜை, நேற்று விஜய தசமி கொண்டாடப்பட்டன. இதற்கு வாழை மரங்கள், பூசணிக்காய் உள்ளிட்டவை பல்வேறு ஊர்களிலிருந்து விற்பனைக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. பூஜைக்கு சுத்தம் செய்த பொருட்கள், பூஜைக்கு பயன்படுத்திய வாழை மரங்கள், பூசணிக்காய், பூக்கள் என, அனைத்து குப்பை தொட்டிகளும் நிரம்பின. இவற்றை சுத்தம் செய்வதற்கு மாநக-ராட்சி சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூடுத-லாக, 8 டிப்பர் லாரிகள், 11 டிராக்டர்களுடன், 230 துாய்மை பணி-யாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.வழக்கமாக தினமும், 450 டன் குப்பை சேகரிக்கப்படும் நிலையில் இரு நாட்களில் கூடுதலாக, 800 டன் குப்பை சேகர-மாகும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை