கழிப்பறை செல்வதில் கோஷ்டி மோதல் களரம்பட்டி கும்பலுக்கு காப்பு
சேலம், சேலம், சூரமங்கலம், கென்னடி நகரை சேர்ந்தவர் சுதிர், 23. இவர் நண்பர்கள் சிலருடன், நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு, எருமாபாளையத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதேநேரம் களரம்பட்டி, நேதாஜி தெருவை சேர்ந்த ராஜ்கிரண், 26, என்பவரும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு வந்தார்.இரு தரப்பினரும் உணவருந்திய பின், அங்குள்ள கழிப்பறைக்கு செல்வதில் அவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. கோஷ்டி பூசலாக மாறி மரச்சட்டம், பீர் பாட்டில், கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். தாக்குதலில் காயம் அடைந்த, சூரமங்கலத்தை சேர்ந்த சுதிர், சரத்குமார், 29, ஜெய்கிருஷ்ணன், 20, சுபாஷ், 23, நரசோதிப்பட்டி தீபன், 24, ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீதேவ், 24, நவீன், 27, ஆகியோர் தலைமறைவாகினர். இதுதொடர்பாக, தனித்தனியே புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு நடந்தது.அதில் களரம்பட்டியை சேர்ந்த ரவுடி ராஜ்கிரண், விக்னேஷ், 22, தனுஷ், 22, அபித் உசேன், 22, சஞ்சய், 24, அஜித்குமார், 19, ரித்திக், 19, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களது கூட்டாளிகள் பிரதீப், பிரேம் ஆகியோரை தேடுகின்றனர்.