அ.பட்டணத்தில் போலி டாக்டர் கைது
அ.பட்டணம், அயோத்தியாபட்டணம் அருகே, போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுார் மலை நகரை சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர், பேளூர் நெடுஞ்சாலையோரம் அவரது சொந்த இடத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆஞ்சநேயர் ஆயுர்வேத சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே, மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நலப்பணிகள் இணை இயக்குனர் நந்தினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று இரவு, 8:00 மணிக்கு சோதனை செய்தனர். அப்போது, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் புகார்படி, போலி டாக்டர் ரமேஷை காரிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.