உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலி டாக்டர் சிக்கினார்

போலி டாக்டர் சிக்கினார்

நாட்றம்பள்ளி, நாட்றம்பள்ளி அருகே, பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் பிஸ்வாஸ், 35. இவர், சண்டியூரில் கிளீனிக் வைத்து, மூலம், பவுத்திரம், கால்வெடிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார். அவரிடம் கடந்த, 17ம் தேதி நாட்றம்பள்ளியை சேர்ந்த ஆனந்தராமன் என்பவர் சென்றபோது, பிஸ்வாஸ் முறையாக டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சையளிப்பது தெரிந்தது. இது குறித்து அவர், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஞானம் மீனாட்சியிடம் புகார் செய்தார். அதன்படி நேற்று, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சண்டியூரில் பஸ்வாஸ் நடத்திய கிளீனிக்கிற்கு சென்று சோதனை செய்ததில் அவர், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிந்தது. புகார் படி, நாட்றம்பள்ளி போலீசார், போலி டாக்டர் பிஸ்வாைஸை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை