உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எலக்ட்ரீஷியனை தாக்கிய ஒரே குடும்பத்தினர் கைது

எலக்ட்ரீஷியனை தாக்கிய ஒரே குடும்பத்தினர் கைது

மேட்டூர், :மேட்டூர், கே.பி.என்.நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தினேஷ்குமார், 40. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அவரது வீடு எதிரே வசிப்பவர் சுரேஷ், 48. கடந்த, 15 மாலை, அப்பகுதியில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது சுரேஷ் வீடு அருகே சாலையை குறுகலாக போட்டுள்ளனர். இதை பார்த்த தினேஷ்குமார், அங்கிருந்த சுரேஷ்குமாரிடம், 'சாலையை ஆக்ரமித்து வீடு கட்டியதால்தான் இப்பிரச்னை' என கூறி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவரது மனைவி சசிகலா, 41, சுரேஷின் தந்தை ஆறுமுகம், 67, ஆகியோர், தினேஷ்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி நேற்று முன்தினம் சுரேஷ், சசிகலா, ஆறுமுகம் ஆகியோரை, மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !