ஓய்வு ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா
தலைவாசல், தலைவாசல், புத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த பாரிவேல், நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது. ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சண்முகம், ஆசிரியரின் பணி அனுபவம் குறித்து பேசினர். தொடர்ந்து பாரிவேலுக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆசிரியர்கள், ஊர்மக்கள் பங்கேற்றனர்.