மேலும் செய்திகள்
குப்பை கொட்ட எதிர்ப்பு29 விவசாயிகள் கைது
12-Feb-2025
இடைப்பாடி: இடைப்பாடி அருகே அரசிராமணி டவுன் பஞ்சாயத்து, குறுக்குப்பாறையூரில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் 25 பேரை நேற்று, 27வது முறையாக போலீசார் கைது செய்து, வழக்கம் போல் மாலையில் விடுவித்தனர்.இடைப்பாடி அருகே, அரசிராமணி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை கொட்ட, தமிழக அரசு குறுக்குபாறையூரில் இடம் தேர்வு செய்து, குப்பை கொட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக போராடி வருகின்றனர்.அதேபோல் நேற்றும் அப்பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த, 19 பெண்கள், 6 ஆண்கள் என, 25 பேரை கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். இதுவரை, 27வது முறையாக தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
12-Feb-2025