பயிர் நிவாரணம் வழங்குவதில் வங்கிகள் குளறுபடி 2,146 கணக்கை முடக்கியதால் விவசாயிகள் அவதி
ஆத்துார்: பயிர் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், 2,146 கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது.'பெஞ்சல்' புயல் மழையால் சேலம் மாவட்டம் முழுதும், 17,615 ெஹக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு இழப்பீடாக, 20,340 விவசாயிகளுக்கு, 27.03 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது. இத்தொகையை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தும் பணியில் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவ-லர்கள் ஈடுபட்டுள்ளனர்.கெங்கவல்லி தாலுகாவில், 4,778 விவசாயிகளின், 3,780 ெஹக்-டேரில் மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், நெல் பயிர்கள் சேதம-டைந்தன. அதற்கு தமிழக அரசு சார்பில், 6.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதில் தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை, நடுவலுார் பகுதி-களில், 2,146 விவசாயிகளுக்கு, அதிக பாதிப்புக்கு குறைந்த தொகையும், குறைந்த பாதிப்புக்கு அதிக தொகையும் என, குளறு-படியாக பணம் வந்துள்ளது.விவசாயிகள் புகாருக்கு பின் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் ஆய்வில், வங்கிகளில் இருந்து குளறுபடியாக நிதி சென்றது தெரிந்தது. இதனால், 4 வங்கி கிளை மேலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாக அறிவுறுத்-தல்படி, 2,146 வங்கி கணக்குகள் தற்காலிக முடக்கம் செய்யப்-பட்டன.இதனால் எந்த பணப்பரிவர்த்தனையும் செய்ய முடியாததால், நேற்று முன்தினம் வங்கிகளுக்கு சென்ற விவசாயிகள், 'நகைக்-கடன் உள்பட எந்த வங்கி சேவைகளையும் பெற முடியவில்லை' என மேலாளர்களிடம் முறையிட்டனர். அதேநேரம் சிலர், வங்கியில் வரவு வைத்த தொகையை எடுத்துவிட்டதால், அத்தொகையை மீண்டும் செலுத்த, வங்கி மேலாளர்கள் அறிவுறுத்தினர்.இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'நிவாரண நிதி வழங்குவதில் ஏற்பட்ட குளறு படியை விரைவில் சரிசெய்து, முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்படும்' என்றனர்.