மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
15-Sep-2024
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 50 விவசாயிகள், மாநில அளவில் ஒரு நாள் கண்டுணர்வு பயணமாக, திருவண்ணாமலை மாவட்டம் அத்தியாந்தல் கிராமத்தில் செயல்படும் சிறுதானிய மருத்துவ மையத்துக்கு நேற்று புறப்பட்டனர். அங்கு சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களான விதை, பருவத்தை தேர்வு செய்வது, விதை நேர்த்தி, விதைப்பு, களை மேலாண்மை, ஒருங்ககிணைந்த உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, அறுவடை, அதற்கு பின் நேர்த்திகளை பார்வையிட்டனர். சிறு தானியங்களில் மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் அதிரசம், ரொட்டி, பிஸ்கட், ரஸ்க், முறுக்கு, ராகி சேமியா, ராகி நுாடுல்ஸ், ராகி இடியாப்பம், கம்பு பிஸ்கட் ஆகியவற்றை தயாரித்து விற்பதை பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.
15-Sep-2024