உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதிய விளக்குகள் இல்லாததால் அச்சம்

போதிய விளக்குகள் இல்லாததால் அச்சம்

வீரபாண்டி, மூடுதுறை ஊராட்சி நாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து மாரியம்மன் கோவில் வரை, 1.5 கி.மீ., கிராம சாலையில் இரு இடங்களில் மட்டும் தெரு விளக்குகள் உள்ளன. இதனால் இரவில், பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். சாலை அருகே உள்ள புதரில் இருந்து தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உலா வருகின்றன. தவிர திருட்டு பயமும் உள்ளதால், போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ