தேக்வாண்டோவில் வீராங்கனை சாதனை
சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் அருகே, நோபல் சாதனை முயற்சி-யாக, தேக்வாண்டோ செய்து காட்டும் நிகழ்வு நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். அதில் வீராங்கனை அமீதா ஜைனாப், 12, தொடர்ந்து, 30 நிமிடங்கள், தேக்வாண்டோவின் பல்வேறு பிரிவுகளை செய்து காட்டினார். இச்சாதனையை அங்கீகரித்து, நோபல் உலக ரெக்கார்ட்ஸ் அமைப்பு இயக்குனர் ஹேமலதா, ஒருங்கிணைப்பாளர் பிருந்தா, சான்றிதழ், பதக்கம் வழங்கினர். இதில் தமிழ்நாடு தேக்-வாண்டோ அசோசியேஷன் சங்க பொதுச்செயலர் செல்வமணி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி உள்பட பலர் பங்கேற்றனர்.