உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

வாழப்பாடி, நவ. 9-வாழப்பாடி, குறிச்சி அருகே அணைமேட்டை சேர்ந்தவர்கள் சதீஷ், 30, லலிதா, 23. இவர்கள், 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சக்தி, 4, தயாளன், 3, என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 4 காலை, விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை லலிதா குடித்ததாக, உறவினர்கள், அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். ஆனால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அவரது தாய் பரிமளா புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். மணமான, 6 ஆண்டில் லலிதா தற்கொலை செய்து கொண்டதால், போலீசார் பரிந்துரைப்படி, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா விசாரிக்கிறார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கடந்த, 4ல் லலிதாவுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லலிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தற்கொலைக்கு துாண்டப்பட்டாரா, வேறு ஏதும் காரணமா என, விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி