மேலும் செய்திகள்
பயிர் சாகுபடி பணி தீவிரம்; உரம் போதுமான இருப்பு
31-Jul-2025
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளர்க-ளுக்கான கூட்டம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதோடு, யுரியா உரங்களை சரியான அளவில் கொள்முதல் செய்து, முறையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். யுரியா பதுக்கல், கடத்தல் போன்றவற்றுக்கு துணை போகக்கூடாது.மாவட்ட அளவில் உர கண்காணிப்பு குழு தொடர்ந்து, அனைத்து உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதில் உர கட்டுப்பாடு ஆணை, 1985ன் படி விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலைய உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் அந்த நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்-கொள்ள, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அனைத்து வகை உரங்களை, முறையாக கொள்முதல் செய்து உரிய ஆவணங்களை சரியாக பராமரித்து பட்டியலிட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டும் வழங்கி, இணை பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து உர இருப்பு, விற்பனை விலை பட்டியல் வழங்கு-வதை நெறிப்படுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மாவட்ட தர கட்டுப்பாடு அலுவலர் கவுதமன், வேளாண் அலுவலர் சுதா, மொத்த உர விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர்கள் பங்-கேற்றனர்.
31-Jul-2025