உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிற்சாலைகழிவுகளில் தீ விபத்து

தொழிற்சாலைகழிவுகளில் தீ விபத்து

தொழிற்சாலைகழிவுகளில் தீ விபத்துஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட்-1ல் உள்ள பேடரப்பள்ளி அருகே, தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் வளாகத்தையொட்டி, தொழிற்சாலையின் தேவையில்லாத அட்டை பெட்டிகள் மற்றும் காலி பெயின்ட் ஸ்பிரே பாட்டில்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஓசூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மேற்கொண்டு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை