நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
ஆத்துார், ஆத்துார் அருகே, தென்னங்குடிபாளையம் கிராமத்தில், நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. நேற்று மாலை, 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் மாலை, 4:25 மணியளவில் சென்று, மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடும் வெயில் தாக்கத்தால், குப்பையில் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட எரி பொருள் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.