மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகைசேலம், நவ. 21-தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார். அதில் தீயணைப்பு குழுவினர், தீ போன்ற பேரிடர் காலங்களில் தற்காத்துக்கொள்ளும் நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் ஏற்படும்போது தீயணைப்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறை, நோயாளிகளை அப்புறப்படுத்தும் வழிமுறை, தீ விபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ''மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டது,'' என்றார்.