தகர வீட்டில் தீ: ரூ.1.50 லட்சம் கருகியது
தாரமங்கலம், தாரமங்கலம், அருணாசலம்புதுாரை சேர்ந்தவர் பாபு, 50. இவரது மனைவி செல்வி. இவர்கள், தகர வீட்டில் வசித்தனர். இரு மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சந்தோஷ், வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, பாபு, செல்வி வீட்டில் இல்லாத நிலையில், மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து தகவல் அறிந்து, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் பீரோவில் இருந்த இரு பத்திரம், 1.50 லட்சம் ரூபாய், துணிகள் உள்ளிட்டவை எரிந்து கருகியதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.