உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரிகளில், நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கின. புதிய மாணவர்களை, ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பில், 1,700 இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், கடந்த சில வாரங்களாக நடந்தது. இதில், 85 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கின.சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பிரேமலதா தலைமையில் ஆசிரியர்கள், புதிதாக கல்லுாரிக்கு வரும் மாணவர்களை, ரோஜா மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். வரவேற்பில், புதிய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியிலும், மாணவிகளுக்கு ரோஜா கொடுத்து, வரவேற்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை