உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை

இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை

சேலம்: தீபாவளி நெருங்கிய நிலையில், இனிப்பு, கார வகைகள் தயாரிப்போர், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், 3 ரோட்டில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 5 நாட்களில், 270 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 70 கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்காலிக கடைகளிலும் சோதனை நடக்கிறது. உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும். தரமான உணவு பொருட்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்களில் தயாரிப்பு நாள், காலாவதி தேதி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அவசியம். இனிப்பு, கார வகைகளில், 100 பி.பி.எம்., மட்டும் பயன்படுத்த வேண்டும். மீறி நிறமி பயன்படுத்தினாலோ, மறுசுழற்சி முறையில் எண்ணெய் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில், 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை